சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா !

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்தியாவின் ராய்பூர் மைதானத்தில் இடம்பெற்ற சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய லெஜன்ட்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
Related posts:
குலசேகராவை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கழகம்!
இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் குவிப்பு!
உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆப்கானை வென்றது பாகிஸ்தான் !
|
|