சாதனையை தவறவிட்ட சங்ககாரா!

Wednesday, May 31st, 2017

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வெறும் 16 ஓட்டங்களில் தவறவிட்டுள்ளார் சங்ககாரா.

முதல் தர கிரிக்கெட்டில் டான் பிராட்மேன், சிபி ஃபிரை, மைக் புராக்டர் ஆகியோர் தொடர்ந்து 6 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். நட்சத்திர வீரரான சங்ககாரா தொடர்ந்து 5 சதங்களை அடித்த நிலையில், ஆறாவது சதத்தையும் அடித்து சாதனை பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெறும் 16 ஓட்டங்களில் இந்த சாதனையை தவறவிட்டுள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் சங்ககாரா, எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 200 ஓட்டங்களை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 84 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், இதன்மூலம் சாதனை படைக்க தவறிவிட்டார்.

Related posts: