சர்ச்சையை கிளப்பியுள்ள அர்ஜூனவின் கருத்து!

Tuesday, July 18th, 2017

இந்தியா இலங்கை அணிகள் மோதிய 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச்பிக்ஸிங் செய்யப்பட்டதாக அர்ஜூன ரணதுங்க கூறுவது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களான கவுதம் காம்பீர் மற்றும் அசிஷ் நெஹ்ரா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய காம்பீர், கிரிக்கெட் உலகின் முக்கியமான புள்ளியாகக் கருதப்படும் ரணதுங்க இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் எழுப்பக் கூடாது.குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொதுவெளியில் எடுத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 97 ஓட்டங்கள் குவித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் காம்பீர்.அதேபோல 2011 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அசிஷ் நெஹ்ரா கூறுகையில், இதுபோன்ற கருத்துகளை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை.ரணதுங்கவின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்புக் கொடுத்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை.1996ல் இலங்கை அணி கோப்பை வென்றது குறித்து நான் கேள்வி எழுப்புவது சரியாக இருக்குமா?. அதேநேரம் ரணதுங்க போன்றவர்களிடமிருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது வருத்தமளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: