சங்ககாராவின் சாதனையை தொட்ட டோனி!

Saturday, August 26th, 2017

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாராவின் சாதனையை முறியடிக்க உள்ளார்

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது

இப்போட்டியில் டோனியின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிது உதவியது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாராவின் சாதனையை டோனி சமன் செய்துள்ளார்

இலங்கை அணியின் தன்ஷிகா குணதிலகாவை டோனி ஸ்டம்பிங் செய்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 99 ஸ்டம்பிங் செய்து சாதனையாக வைத்திருந்தார்.

தற்போது அந்த சாதனையை டோனி தொட்டுள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் இத்தொடரில் மூன்று போட்டிகள் உள்ளதால், இத்தொடரிலே சங்ககாராவின் சாதனை முறியடிப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: