கோல் மழையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது ஊரெழு றோயல் அணி!

Thursday, October 13th, 2016

சயந்தன், நிதர்சன் ஆகியோரது அதிவேக கோல்கள் கைகொடுக்க முதல் போட்டியிலேயே கோல் மழையுடன் வெற்றிப் பயணத்தை தொடங்கியது றோயல் அணி. குப்பிளான் குறிஞ்கிக் குமரன் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடத்திவரும் “வடக்கின் வல்லரசன்” உதைப் பந்தாட்ட தொடரின் சுப்பர்-6 ஆட்டங்கள் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் மன்னார் விடத்தல் தீவு ஜக்கியம் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை நிலைநாட்டிய றோயல் அணிக்கு நிதர்சன் 4,8 ஆவது நிமிடங்களில் தனது அதிவேக உதைமூலம் 2 கோல்களைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்;து 15அவது நிமிடத்தில் கானுஜன் கோலினை பெற்றுக் கொடுக்க றோயல் அணி 03.00என முன்னிலை வகித்தது. சற்றும் சளைக்காத விடத்தல்தீவு ஜக்கியம் அணிக்கு 17,19 ஆவது நிமிடங்களில் ஜாங்சன், டெலக்சன் ராஜ் கோல்களைப் பெற்றுக் கொடுகடக ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. தொடர்ந்து 24ஆவது நிமிடத்தில் கஜகோபன் றோயல் அணிக்கு கோலினைப் பெற்றுக் கொடுக்க முதல் பாதி ஆட்டம் 04.02 என நிறைவு பெற்றது. 2ஆம் பாதி ஆட்டம் தொடர்ந்த போது தனது ஆதிக்கத்தை மேலும் நிலைநாட்டிய றோயல் அணிக்கு சயந்தன் மின்னல் வேகத்தில் 35,37 ஆவது நிமிடங்களிலும் கானுஜன், கபில், நிதர்சன் ஆகியோர் 40,42,46 நிமிடங்களில் கோல்களைப் போட்டனர். பதிலுக்கு எதிரணியால் கோல் போட முடியாமல் போக றோயல் அணி 09.02 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சயந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

cponte_brick_well-720x480 copy

Related posts: