கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்:  காலிறுதிக்கு நுழைந்தது கொலம்பியா!

Thursday, June 9th, 2016

அமெ­ரிக்­காவில் 45ஆவது கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடர் நடைபெற்று வரு­கி­றது. இதில் பிரேசில், ஆர்­ஜன்­டீனா உட்­பட 16 அணிகள் 4 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் சுற்றில் விளை­யா­டு­கின்­றன.

இதில் “ஏ” பிரிவில் கொலம்­பியா- பரா­குவே அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் 12ஆவது நிமி­டத்தில் கொலம்பியா அணிக்கு கார்லோஸ் ஒரு கோல் போட்டார்

தொடர்ந்து 30ஆவது நிமி­டத்தில் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் போட முதல் பாதியில் கொலம்பிய அணி 2–-0 என முன்னிலை பெற்­றது

பின்னர் பரா­குவே அணிக்கு 71ஆவது நிமி­டத்தில் அயாலா ஒரு கோல் மட்­டுமே போட முடிவில் கொலம்­பியா 2–-1 என வெற்றி பெற்­றது. இதன் மூலம் 6 புள்­ளிகள் பெற்ற கொலம்­பியா முதல் அணி­யாக காலி­று­திக்கு தகுதி பெற்­றது.

சிகா­கோவில் நடந்த மற்­றொரு லீக் ஆட்­டத்தில் கோஸ்­டா­ரிகா அணியை அமெ­ரிக்கா 4–-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்­தி­யது கொலம்பியா அணி முதல் அணி­யாக காலி­று­திக்கு முன்­னே­றி­யது.

Related posts: