கொல்கத்தா அணிக்கு தேர்வான இலங்கை வீரர்!

Saturday, February 18th, 2017

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கு இலங்கை அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் நிரோசன் டிக்வெல்லாவை, கொல்காத்தா அணி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஏனையநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் குறிப்பிட்ட தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர். இதைத் தொடர்ந்து இந்தாண்டிற்கான ஏலம் நடைபெற்றது.

இதில் கொல்கத்தா அணி, இலங்கை அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் நிரோசன் டிக்வெல்லாவை வாங்கியுள்ளது. 23 வயதான டிக்வெல்லா இலங்கை அணிக்காக டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துவக்க ஆட்டக்காரரான இவர் டி 20 போட்டியில் 140 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதால் கொல்கத்தா அணி இவரை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொல்கத்தா அணிக்கு தற்போது விக்கெட் கீப்பராக இந்திய அணியைச் சேர்ந்த உத்தப்பா உள்ளார். இவருக்கு தற்போது உள்ளூரில் நடந்த தொடரின் போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு சர்வதேச மற்றும் நல்ல துவக்க வீரர் வேண்டும் என்பதற்காக டிக்வெல்லாவை கொல்கத்தா அணி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் வானவேடிக்கை நிகழ்த்துவதற்கு டிக்வெல்லா தயாராகிவரலாம் என்று கூறப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: