கையும் களவுமாக மாட்டிய அவுஸ்திரேலிய வீரர்!

Monday, March 26th, 2018

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்தியது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலியா வீரர் Bancroft பந்தை சேதப்படுத்தியுள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது.

அதாவது பந்து விசுவதற்கு முன்னர் பந்தை வாங்கும் Bancroft தன்னுடைய கையில் இருக்கும் ஒரு பொருளை வைத்து பந்தை சேதப்படுத்துகிறார்.

அதன் பின் பந்தை வீசிய பின்பு பீல்டிங் இடத்திற்கு சென்ற பின், பந்தை சேதப்படுத்துவதற்காக பயன்படுத்திய பொருளை வெளியில் எடுக்கிறார். அந்த பொருளானது மஞ்சள் நிறத்தில் உள்ளது.

ஏன் இவர் இப்படி செய்தார்? என்பது குறித்து தெரியவில்லை, அதுமட்மின்றி பந்தை சேதப்படுத்துவது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித்திற்கு முன்பே தெரியும் எனவும் கூறப்படுவதால், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், கூறப்படுகிறது.

Related posts: