கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் நியூஸ்ரார் அணி வெற்றி!

Tuesday, April 17th, 2018

கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத்திற்கான வெள்ளி விழா தொடரின் 5 ஆவது போட்டி கடந்த சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நியூஸ்ரார் அணி, டிறிபேக் ஸ்ரார் அணியை 3 இலக்குகளால் வெற்றிபெற்று 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டிறிபேக் அணி 27 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பிரவீன் – 12, தர்ஸன் – 39, பார்த்தீபன் – 80, மார்க்சிங் – 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் நியூஸ்ரார் சார்பாக தீபன் – 3, பிரசாத் – 2, மோகன் – 4, ராசேந்திரம் – 1 இலக்கினைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸ்ரார் அணி 27.3 ஓவர்களில் 7 இலக்குகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றனர். தீபன் – 25, கபில் – 37, ராசேந்திரம் ஆட்டமிழக்காது ௲ 23, மோகனதீபன் – 21, கஜேந்திரா ௲ 1, கிரிசாந் – 10 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் டிறிபேக்ஸ்ரார் சார்பாக பார்த்தீபன், சங்கீதன், பிரதீப் தலா 1 இலக்கினையும் மார்க் சிங் – 4 இலக்குகளையும் கைப்பற்றினர்.

இப் போட்டியின் மூலம் யாழ். சென்றல் விளையாட்டுக் கழகம் 9 ஆவது ஆண்டாக நடத்தி வரும் யாழ். நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்விற்கு நியூஸ்ரார் அணி 6.20 புள்ளிகளையும் டிறிபேக்ஸ்ரார் அணி 2.59 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.

Related posts: