கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் காலிறுதியில் பரீஸ் அணி!

கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ண வெள்ளிவிழா தொடரில் 14 ஆவது போட்டி 21 ஆம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் பரீஸ் அணி விங்ஸ் அணியை 98 ஓட்;டங்களால் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பரீஸ் அணியினர் 26.2 ஓவர்களில் 9 இலக்குகளை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றனர். நிதர்ஸன் – 71, சுஜீவன் – 18, சபேசன் – 10, வினோத் – 45, அனோஜன் – 17, ஹரிகரன் – 47 ஓட்டங்களைப் பெற்றனர்.
சுரேன் – 01, வினோத் – 01, திலக்ஸன் – 05 இலக்குகளைக் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விங்ஸ் அணி 21.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
ஓநாசியஸ் – 27, விதுஸன் – 32, றெபர்சன் – 32, ஓட்டங்களைப் பெற்றனர். கிசோக்குமார் – 02, ஹரிகரன் – 03, வினோத் – 02, நிதர்ஸன் – 03 இலக்குகளைக் கைப்பற்றினர்.
இப் போட்டியின் மூலம் யாழ். சென்றல் விளையாட்டுக் கழகம் நடத்தும் தரவரிசைப் பட்டியலுக்கு பரீஸ் அணி 7.33 புள்ளிகளையும் விங்ஸ் அணி 2.27 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
Related posts:
|
|