கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை செய்த ஆப்கான் வீரர்!

Thursday, June 20th, 2019

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 9 ஓவரில் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததன் மூலம், ஆப்கான் அணி வீரர் ரஷித் கான் மோசமான சாதனையை செய்துள்ளார்.

இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றுமுன்தினம் மான்செஸ்டரில் நடந்தது. இதன்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்கள் குவித்தது.

குறிப்பாக, அணித்தலைவர் இயான் மோர்கன் 71 பந்துகளில் 17 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 148 ஓட்டங்கள் விளாசினார். இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தினை ஆப்கானிஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிலும், அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கான் ஓட்டங்களை வாரி வழங்கினார். 9 ஓவர்கள் வீசிய அவர் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் வரிசையில் 2வது இடத்தை பிடித்தார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸும் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளார். ஆனால், அவர் 10 ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனைப் பட்டியலில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் லீவிஸ் 113 ஓட்டங்களை கொடுத்து முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: