களத்திற்கு திரும்பும் உலக குத்துச்சண்டை சாம்பியன்?

Wednesday, November 9th, 2016

அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய குத்துச்சண்டை வீரரான மேனி பாகியோவிற்கு பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் Las Vegas நகரில் கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற சர்வதேச குத்துசண்டைப் போட்டியில், 27 வயதான அமெரிக்க வீரர் Jessie Vargas உடன் இவர் மோதினார்.

இந்தப் போட்டியில் மேனி பாகியோ, வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றார். வெற்றிக்குப்பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பிய மேனி பாகியோவிற்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

37 வயதான மேனி பாகியோ, தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டபின் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேனி பாகியோ 8 முறை உலகச்சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிக்கு பின்னர், சொந்த நாட்டில் அரசியலில் மீண்டும் இவர் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: