கராத்தே போட்டியில் சாதித்தது ஜோன்ஸ்!

வடமாகாணக் கல்வித்திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே தொடரில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்குக் கணிசமான பதக்கங்கள் கிடைத்தன.
நெல்லியடி மத்திய கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வி.நிவேதன் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குமித்தே போட்டி, குழுக் காட்டா, குழுக் குமித்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் எஸ்.திருஸாந் 18 வயதுப் பரிவு ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குழுக் காட்டா, குழுக் குமித்தே போட்டிகளில் தங்கப்பதக்கங்களையும் எ.தனுசன் 20 வயது ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குமித்தேப் போட்டி, குழுக் காட்டா, குழுக்குமித்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் எஸ்.சரண் கீர்த்தன் 18 வயதுப்பரிவு ஆண்கள் பிரிவில் காட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Related posts:
மீண்டும் வெற்றியை ருசித்தது ஜமைக்கா!
முரளிதரனின் பந்து வீச்சை தவரென்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கினார்!
ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம்!
|
|