கடன் வாங்கி ஒலிம்பிக்கில் செல்லும் தமிழக வீரர்!

Tuesday, July 26th, 2016

பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி வேகநடை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரர் திருப்பதியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரர் கணபதி அடுத்த மாதம் பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 20 மீற்றர் வேகநடை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இவரது குடும்பத்தினர் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளனர். இருப்பினும் அவரது தந்தை பிரேசில் செல்லும் தனது மகனுக்காக ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கணபதி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது குடும்பத்தினர், அவர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts: