ஒரு தொடரை கூட கைப்பற்றாத இலங்கை அணி!
Friday, April 7th, 2017
இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி மூன்று வித தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர் சமநிலையில் முடிந்தது.
இதனால் டி20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்று இலங்கை அணி முதல் டி20 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்
ஆனால் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்ப, வங்கதேச அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தன்னுடைய நேர்த்தியான பந்து வீச்சால் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர்க் முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியேற்றினார்.
இதில் இரண்டு விக்கட்டுகளை முஸ்தபிசுர் அடுத்தடுத்து வெளியேற்றினார். இப்போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் சொந்த மண்ணில் நடந்த மூன்று தொடர்களில் ஒரு தொடரைக் கூட இலங்கை அணியால் கைப்பற்ற முடியாமல் போனது இலங்கை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|