ஐசிசி உலகக் கிண்ணம் – தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Sunday, June 9th, 2024

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த நிலையில் 104 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: