எதிர்வரும் ஜனவரியில் IPL – 2018 ஆம் ஆண்டுக்கான ஏலம் !

Friday, December 22nd, 2017

2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக்கின் (IPL) ஏலம் எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், தென்னாபிரிக்காவுடனான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பித்து 28ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில், இப்போட்டியின் இறுதி இரண்டு நாளிலேயே ஏலம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்தியன் பிறீமியர் லீக்கிலுள்ள எட்டு அணிகளிடமும் தாம் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் இறுதியான பட்டியலை எதிர்வரும் ஜனவரி நான்காம் திகதிக்குள் தருமாறு இந்தியன் பிறீமியர் லீக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏலத்தில் விடப்படும் வீரர்களின் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் திகதியளவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

Related posts: