உலக கிண்ண தொடரில் விளையாட மெஸ்ஸிக்கு தடை!

Wednesday, March 29th, 2017

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸிக்கு 4 உலக கிண்ண தகுதி போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற சிலி அணிக்கு எதிரான தகுதி போட்டியில் 1-2 என அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியின் போது அர்ஜென்டினா அணித்தலைவர் மெஸ்ஸி வாய் வார்த்தையாக போட்டி நடுவரை அவமானப்படுத்தியது தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பிபா ஒழுங்கு குழு அறிவித்துள்ளது.

அதன் படி எதிர்வரும் நான்கு உலக கிண்ண தகுதி போட்டியில் பங்கேற்க மெஸ்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி 10,160 டொலர்(இலங்கை மதிப்பில் 15 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.எனினும் மெஸ்ஸிக்கு எதிரான தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது.

Related posts: