உலக கிண்ண காற்பந்து தொடரை கூட்டாக இணைந்து நடத்த 3 நாடுகள் கோரிக்கை!

Friday, October 6th, 2017

2030 ஆம் ஆண்டுடன் உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தநிலையில் அந்த தொடரை நடத்துவதற்கு, உருகுவே, ஆர்ஜன்டீனா மற்றும் பரகுவே ஆகிய நாடுகள் கூட்டாக ஏலத்தில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 உலக கிண்ணம் ரஷ்யாவிலும், 2022 உலக கிண்ணம் கட்டாரிலும் நடைபெறும் அதேநேரம், 2026ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 2030ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தொடரை நடத்தும் வாய்ப்பு ஆங்கிலேய நாடொன்றுக்கு வழங்குவதற்கான யோசனை முன்னதாகவே முன்வைக்கப்பட்டிருந்தது இந்நிலையிலேயே குறித்த 3 நாடுகளும் கூட்டாக இந்த போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பை கோரவுள்ளதாக அறிவித்துள்ளன

Related posts: