உலக கிண்ண காற்பந்து: தகுதிகாண் போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை !
Wednesday, May 29th, 20192022ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கு இலங்கை தேசிய அணி தயாராகிறது
இதற்காக லாவோஸ் அணியுடன் இன்று இலங்கை தேசிய அணி நட்பு ரீதியான போட்டி ஒன்றில் விளையாடுகிறது.
கோல் காப்பாளரான சுஜன் பெரேரா இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார்.அவர் மாலைத்தீவின் ஈகல்ஸ் கழகத்துக்காகவும் விளையாடி வருகிறார்.
இலங்கை தேசிய காற்பந்தாட்ட வீரர்களில் வெளிநாடுகளில் அதிகம் பரீட்சியம் மிக்கவராக சுஜன் காணப்படுகிறார்.
தற்போது லோவோஸ் சென்றுள்ள இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணி, இன்றும் எதிர்வரும் 31ம் திகதியும் இரண்டு நட்புரீதியான போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன் பின்னர் சீனா சென்று ஜுன் மாதம் 6ம் திகதி முதலாவது உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கவோ அணிக்கு எதிராக இலங்கை அணி தமது முதலாவது தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளது. அதன் இரண்டாம் பகுதி ஜுன் 11ம் திகதி சுகததாசவில் நடைபெறும்.
Related posts:
|
|