உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி!

Monday, October 9th, 2017

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஸ்பெயின் அணி தகுதி பெற்றுள்ளது.

ஸ்பெயினின் அலிகேன்ட் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை தோற்கடித்தது.இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தது. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ 16-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, 23-ஆவது நிமிடத்தில் இஸ்கோவும், 26-ஆவது நிமிடத்தில் தியாகோவும் கோலடித்து அசத்தினர்.
வெற்றி குறித்துப் பேசிய ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலென் லொபேட்குய், “இந்த வாரம் மிகக் கடினமான வாரமாகும். எனினும் அல்பேனியாவுக்கு எதிராக முதல் 30 நிமிடங்களிலேயே சிறப்பாக ஆடிவிட்டோம். இது எங்களுடைய அதிர்ஷ்டமாகும்’ என்றார்.

Related posts: