உலகக் கிண்ண T20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பு – சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு!
Thursday, May 28th, 20202020 ஆண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், 2022ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் / நவம்பர் மாதங்களில் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளாத நிலையில் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் விளையாட்டு துறைசார் நிகழ்வுகளை அனைத்து நாடுகளும் பிற்போட்டும் ஒத்திவைத்தும் வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இவ்வாண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டி தொடரை எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரொபின் பீட்டர்சன் ஓய்வு!
முன் அறிவித்தல் ஏதும் இன்றி உதைபந்தாட்ட போட்டிக்குத் தடை: பெற்றோர் குற்றம் சாட்டு!
வெற்றி பெற்றது இந்திய அணி!
|
|