உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!

Sunday, June 9th, 2024

டி20 உலகக்கோப்பை தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் – உகாண்டா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

Providenceயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் விளையாடிய Johnson Charles அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 12 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Akeal Hosein 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: