உங்களால் முடியாது – உலகக் கோப்பை கிரிக்கெற் தொடர்பீல் பீட்டர்சன்!

Wednesday, June 19th, 2019

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை சமாளிக்கவே முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சவால் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இங்கிலாந்து வீரர் ராய் தவறவிட்டால், பேரிஸ்டோவ் உங்களைப் பார்த்துக்கொள்வார். அவர்கள் இருவரும் தவறவிட்டால், ரூட் உங்களைப் பார்த்துக்கொள்வார். அவர்கள் அனைவரும் தவறவிட்டால் பட்லர் உங்களைப் பார்த்துப்பார்.

மற்றும், ஜோஃப்ரா எப்போதுமே உங்களைப் பார்த்துக்கொள்வார்! இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை கொடுத்துவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பல இந்திய ரசிகர்கள், இங்கிலாந்து மொத்த அணியையும் இந்தியா பார்த்துக்கொள்ளும். இந்தியாவிற்கு கோப்பை கொடுத்துவிடுங்கள் என பதிவிட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி 3 வெற்றி, 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்கவாது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts: