இவர்களை போன்றவர்கள் தான் அணிக்கு தேவை: அரவிந்த டி சில்வா !

Tuesday, December 6th, 2016

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், அசங்க குருசிங்க போன்ற வீரர்களின் அறிவுத்திறன் தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

“எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த டி சில்வா, அடிமட்டத்தில் இருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இதுவொரு நீண்டகால திட்டம் என்பதுடன் வீரர்கள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். முக்கியமாக துடுப்பாட்ட பயிற்சியை இலங்கை ஏ அணி மற்றும் மாகாண அணிகளுக்கு வழங்க திட்மிட்டுள்ளோம்.

இலங்கை வீரர்களுக்கு முன்னாள் வீரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், அசங்க குருசிங்க போன்ற வீரர்களின் அனுபவமும் அறிவுத்திறனும் தேவைப்படுகிறது.

ஓட்டங்களை மட்டும் குவிப்பதால் அணியில் வீரர்களை தெரிவு செய்ய முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தமது மூளையை பயன்படுத்தும் வீரர்களே அணியில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Untitled-2(77)

Related posts: