இளம் வீரர்களுக்கு அறிவுரை சொல்லி போல்ட்!

Wednesday, August 16th, 2017

“எடுத்துக் கொண்ட முயற்சியிலிருந்து ஒருபோதும் பின் வாங்காதீர்கள்” என, சர்வதேச தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உலகின் மின்னல் வேக மனிதன் உசேன் போல்ட், இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகில் யாராலும் நெருங்க முடியாதவாறு எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய, மின்னல் வேக மனிதரான ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட், இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியுடன் சர்வதேச தடகள போட்டிகளில் ஓய்வு பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 11 முறை சாம்பியன் பட்டமும்,  ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ள போல்ட்டிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரசிகர்கள் பிரியாவிடைக் கொடுத்தனர்.

இரசிகர்களின் பிரியாவிடையினைப் ஏற்றுக் கொண்டு போட்டிகளிலிருந்து முழுமையாக விடைபெற்றுக் சென்ற அவர், கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நான் நிருபித்துள்ளேன். அது உங்களாலும் முடியும் என்று, இளம் தலைமுறையினருக்கு கூறியுள்ளார்.

முயற்சியால், தான் இங்கு அமர்ந்து பேட்டி கொடுப்பதாகவும், “எதுவும் சாத்தியம்” என்பதே தனது தாரக மந்திரம் என்றும் கூறிய அவர், அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதையே இது எடுத்துக் காட்டுவதாகவும் கூறினார்.

அத்துடன், தான் நிச்சயமாக மீண்டும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் போட்டிகளுக்கு திரும்பி மோசமாக செயல்பட்டு, அவமானங்களை சந்தித்த பலரை பார்த்துள்ளதாகவும் கூறினார்.

உசேன் போல்ட், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் குறுந்தூ ஓட்டத்தில் உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: