இலங்கை தாக்குதல் எதிரொலி: சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு!

Wednesday, April 24th, 2019

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைதானத்தைச் சுற்றி 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: