இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜாக்பாட்!
Wednesday, October 26th, 2016
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் அடுத்த 3 ஆண்டுகளில் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை சுமதிபால தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், வீரர்களின் கருத்துகளை ஆராய்ந்த பிறகு புதிய வரைவு ஊதிய ஒப்பந்தம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தரவரிசையில் வீரர்களின் சறுக்கல் இருக்கும் போது ஊதியமும் குறையும் என்பதை பல வீரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் படி புதிய ஊதிய ஒப்பந்தம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2016-17 புதிய ஊதிய ஒப்பந்தம் படி, சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தில் 17 வீரர்களும், பிரீமியம் ஒப்பந்தத்தில் 13 வீரர்களும், தேசிய ஒப்பந்தத்தில் 70 வீரர்களும் என மொத்தம் 100 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.இந்த ஊதிய ஒப்பந்தம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|