இலங்கை கால்பந்தாட்ட அணியில் வடக்கின் மூன்று வீரர்கள் இணைப்பு!

Saturday, July 7th, 2018

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் 24 பேர் கொண்ட வீரர்கள் குழாமில் வடக்கு வீரர்களான மரியதாஸ் நிதர்சன், ஜீட்சுமன், டக்ஸன் பியுஸ்லஸ் ஆகிய மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியாக எதிர்வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றவுள்ள 24 பேர் கொண்ட அணித்தெரிவொன்றை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இந்த அணித்தெரிவில் வடக்கிலிருந்து மேற்குறிப்பிட்ட 3 வீரர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து மொஹமட் முஸ்தாக் ஆகியோர் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தேசிய அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள், இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெற்றன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுநர் ரூமி பக்கீர் அலி தலைமையில் கொழும்பு, பெத்தகான மைதானத்தில் நடைபெற்றது.

Related posts: