இலங்கை அணி 9 விக்கட்களினால் வெற்றி

Wednesday, May 24th, 2017

இலங்கை அணி மற்றும் ஸ்கோட்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் 9 விக்கட்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடததுடன், உபுல் தரங்க அணியின் தலைவராக செயற்பட்டார்.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கோட்லாந்து அணி 43 ஓவர்களும் 2 பந்துகளும் நிறைவில், சகல விக்கட்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.பந்து வீச்சில் சந்தகென் 4 விக்கட்களை கைப்பற்றினார்.இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்களும் 5 பந்துக்களும் நிறைவில், ஒரு விக்கட்டை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இதேவேளை, அணியின் தலைவர் உப்புல் தரங்க 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: