இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி !

Monday, October 25th, 2021

2021 T29 உலகக்கிண்ண தொடரில் ,இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று (24) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி கள தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது

பந்து வீச்சில் சமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி சார்ப்பில் மொஹமட் நயீம் 62 ஓட்டங்களையும் முஸ்தபி{ர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

172 என்ற வெற்றி ஓட்டஇலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றார். பாணுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Related posts: