இலங்கை அணி 19 ஓட்டங்களால் தோல்வி!
Saturday, January 21st, 2017
மழைகாரணமாக 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றது
துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 40 ஓட்டங்களையும் பர்ஹான் பெஹர்டீன் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
பதிலளித்தாடிய, இலங்கை அணி 10 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்போது நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றார் போட்டியின் சிறப்பாட்டக்காரராக 12 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றிய லுங்கி நிகிடி தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|