இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம்!

Saturday, October 29th, 2016

யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இருபதுக்கு-20 போட்டிகளின் தரப்படுத்தல்களில், 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது.

2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபதுக்கு-20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வருடத்துக்கான அனைத்து இருபதுக்கு-20 போட்டிகளும் முடிவடைந்தமையால், இருபதுக்கு-20 அணிகளின் தரவரிசையை இன்று புதன்கிழமை (26) வெளியிட்டுள்ளது.

இதில் பங்குபற்றிய 13 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றிபெற்று, 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார் அணி முதலிடத்தைப் பெற்றது. திருநெல்வேலி கிரிக்கெட் அணி பங்குபற்றிய 12 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றிபெற்று, 46.81 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், சென்றலைட்ஸ் அணி பங்குபற்றிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று, 37.87 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து வரும் இடங்களில் ஜொனியன்ஸ் (33.16 புள்ளிகள்), பற்றீசியன் (27.55 புள்ளிகள், சென்ரல் (22.93 புள்ளிகள்), கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் (20.68 புள்ளிகள்), கிறாஸ்கோப்பர்ஸ் (17.70 புள்ளிகள்), ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி (16.30 புள்ளிகள்), யூனியன் (15.88 புள்ளிகள்), விக்டோரியா (13.71 புள்ளிகள்), டிறிபேக் ஸ்ரார் (13.53 புள்ளிகள்), அரியாலை சென்ரல் (11.18 புள்ளிகள்), ஸ்ரீகாமாட்சி (9.67 புள்ளிகள்), ஒல்ட்கோல்ட் (9.35 புள்ளிகள்), ஹாட்லியட்ஸ் (9.04 புள்ளிகள்), நியுஸ்ரார்ஸ் (9 புள்ளிகள்), விங்கஸ் (8.41 புள்ளிகள்), றெஜின்போ (5.20 புள்ளிகள்), யங்ஸ்ரார்ஸ் (4.87 புள்ளிகள்), ஸ்ரான்லி (4.50 புள்ளிகள்), திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ (3.16 புள்ளிகள்) ஆகியன உள்ளன.

article_1477580123-P13-LEAD_27102016_GPI

Related posts: