இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலிக்கு ஜிம்கானா கிளப் பாராட்டு!

Tuesday, February 7th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலியின் செயற்பாடுகளை முன்னிறுத்தி சிவாஜி பார்க் ஜிம்கானா கிளப் பாராட்டு பாராட்டியுள்ளது.

இந்தியாவின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் தலைவராக விராட் கோலி திகழ்கின்ற நிலையில், அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த அளப்பரியை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள பிரபல விளையாட்டு பயிற்சி மையமான சிவாஜி பார்க் ஜிம்கானா கிளப் சார்பிலே பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோலி ஜிம்கானா மையத்திற்கு சென்ற நிலையில், அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜிம்கானா தலைவர் மற்றும் நிர்வாகிகள் கோலியை பாராட்டியுள்ளனர். ஜிம்கானா விளையாட்டு பயிற்சி மையம் இதற்கு முன் பல்வேறு கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்காக தந்துள்ளது.

அவர்களில் அஜித் வடேகர், சுனில் கவாஸ்கர், சந்தீப் பட்டீல், சஞ்சய் மஞ்ரேக்கர், பிரவீன் அம்ரே, அஜித் அகார்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்கது.

o-VIRAT-KOHLI-facebook-720x480

Related posts: