இந்திய அணி மேற்கிந்திய செல்கிறது!

Friday, June 3rd, 2016

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்தத் தொடர் 49 நாள்களை கொண்டதாகும். ஜூலை 6-ஆம் திகதி செயின்ட் கீட்ஸ் சென்றடையும் இந்திய அணி, அங்குள்ள வார்னர் பார்க்கில் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜூலை 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

அதே மைதானத்தில் ஜூலை 14 முதல் 16 வரை நடைபெறும் 3 நாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. அதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஜூலை 21-ஆம் திகதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2-ஆவது டெஸ்ட் ஜூலை 30-ஆம் திகதி ஜமைக்காவிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 9-ஆம் திகதி செயின்ட் லூசியாவிலும் தொடங்குகின்றன. 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 18-ஆம் திகதி டிரினிடாட் அன்ட் டொபாக்கோவில் தொடங்குகிறது.

Related posts: