இந்தியா தமது முதலாவது போட்டியை 2019 ஜுன் மாதம் 5ஆம் திகதியே -இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபை!

Thursday, April 26th, 2018

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா தமது முதலாவது போட்டியை 2019 ஜுன் மாதம் 5ஆம் திகதியே விளையாடும் என்று இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த உலகக்கிண்ண தொடர் பிரித்தானியாவில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி முதல், ஜுலை மாதம் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முதலில் இந்த தொடரில் இந்திய அணியின் முதலாவது போட்டி ஜுன் மாதம் 2ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மே மாதம் 19ம் திகதி நிறைவடைகின்ற நிலையில், ஐ.பி.எல். தொடருக்கும், உலக கிண்ண தொடருக்கும் இடையில் 15 நாட்கள் கட்டாய கால அவகாசம் பேணப்பட வேண்டும் என்றுஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை கருதுகிறது.

இதறகமைய தமது முதலாவது போட்டியை ஜுன் மாதம் 5ம் திகதி விளையாடுவதாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் தெரியப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்றாளர்கள் குழு கூட்டத்தில் வைத்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: