இந்தியா செல்கின்றது இலங்கை அணி

Sunday, July 30th, 2017

இலங்கை கிரிக்கட் அணி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் தலைமைச் நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ரி-ருவென்ரி போட்டி ஒன்றில் இரு அணிகளும் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்ததொடர் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்திய அணியின் தென் ஆபிரிக்க சுற்றுப் பயணம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

Related posts: