இந்தியா அசத்தல்! கோலி சதம்!!

Friday, July 22nd, 2016

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்திலேயே முரளி விஜய், புஜாரா வெளியேற தவானுடன் இணைந்தார் கோலி. இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்க்க இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவான் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு அவர்களுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 

134
பந்துகளை சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தனது 12வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே ஆட்டமிழந்ததால் நைட் வாட்ச்மேனாக  களமிறக்கப்பட்ட அஷ்வின் சிறப்பாக ஆடி 22 ரன்களுடனும், சதமடித்த கோலி 143 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 302/4 என்ற நிலையில் உள்ளது.

Related posts: