இந்தியாவுடனான தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

Friday, November 3rd, 2017

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சண்டிமால் தலைமையில் களமிறங்கவிருக்கும் இலங்கை அணியில் முன்னணி வீரர்களான அசேல குணரட்ண, அஞ்சலோ மத்யூஸ், குசல் பெரேரா ஆகியோர் மீண்டும் இடம்பெறுள்ளனர்.

இலங்கை அணி விபரம் வருமாறு –

 தினேஷ் சண்டிமால் (தலைவர்) குசல் சில்வா, திமுத் கருணரத்ன, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மத்யூஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லஷான் சந்தகான், தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், மலிந்த புஸ்பகுமர.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 16-ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தா நகரில் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: