இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேத்தியூஸ் !

Wednesday, November 1st, 2017

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்திய அணியுடன் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில், ஏஞ்சலோ மேத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைக்க தெரிவுக் குழு ஆயத்தமாகி வருவதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியுடன் இலங்கையில் இடம்பெற்ற போட்டியின் போது ஏஞ்சலோ மேத்தியூஸ் உபாதைக்கு உள்ளாகிய நிலையில், இந்த வருடம் இடம்பெற்ற செம்பயின்ஸ் கிண்ண போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவும் உபாதைக்கு உள்ளானார்.

மேத்தியூஸ் மற்றும் குசல் தற்போது அந்த உபாதைகளில் இருந்து குணமாகியுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தி அணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் உறுதி செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன

Related posts: