இங்கிலாந்து – இலங்கை மோதிய முதல் போட்டி சமநிலையில்!

Wednesday, June 22nd, 2016

இங்கிலாந்து –இலங்கை அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் மோதிய போட்டி நாட்டிங்காம், ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் குவித்தார்.

இங்கிலாந்து தரப்பில் Woakes, Willey, Plunkett ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.

அதிகபட்சமாக Woakes 95* ஓட்டங்கள் குவித்தார், இலங்கை தரப்பில் லக்மால், மேத்யூஸ், பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைபட்டது. கடைசி பந்தை சந்தித்த Plunkett அதை சிக்சருக்கு அடித்து போட்டியை டிரா செய்தார்.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 0-0 என்ற சமநிலையிலே உள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: