இங்கிலாந்து அணியின் ஆலோசகராக சக்லைன் முஸ்தாக் தொடர்ந்தும் நீடிப்பு!

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக்கின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி பங்களாதேஷில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்பு தற்போது இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆசியக் கண்டத்தில் (இந்தியா, இலங்கை, பங்களாதேஷ்) உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்காள தேச தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தொடரின்போது இரண்டு வாரங்கள் ஆலோசனை வழங்க பணியமர்த்தப்பட்டார்.ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, ரஷித் மற்றும் அன்சாரி ஆகியோர் சிறந்த வகையில் பந்து வீசினார்கள்.
இதற்கு சக்லைன் முஸ்தாக்கின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று இங்கிலாந்து அணி கருதுகிறது. இதனால் மொகாலியில் நடைபெற இருக்கும் 3-வது டெஸ்ட் வரை சக்லைன் முஸ்தாக் தொடர்ந்து ஆலோசகராக செயல்படும் வகையில் அவரது பதவிக்காலத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை நீடித்துள்ளது.
Related posts:
|
|