இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்!

Friday, May 27th, 2016

இலங்கை – இங்­கி­லாந்து அணிகள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்மாகவுள்­ளது. இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடிவரும் இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோது­கின்­றது.

இதில் லீட்ஸில் நடை­பெற்ற முதல் போட்­டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

2014ஆம் ஆண்டு இவ்­விரு அணி­களும் மோதிய டெஸ்ட் தொடரை இலங்கை வெற்­றி­கொண்டு அசத்­தி­யது. அந்த போட்­டி­க­ளின்­போது குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் அணியில் இடம்­பெற்­றி­ருந்­தனர். இவர்கள் இரு­வரும் ஓய்­வு­பெற்ற பின்னர் இலங்கை அணி சற்று தடு­மா­றி­வ­ரு­கி­றது.

இந்­நி­லையில் இளம் வீரர்­க­ளுடன் கள­மி­றங்­கி­யுள்ள இலங்கை அணி 2014ஆம் ஆண்டு பெற்ற வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டிய இக்­கட்­டான நிலையில் இருக்­கி­றது. எது எவ்வாறா யினும் வெற்றி வேட்கையோடு இன்றைய போட்டியில் களமிறங் குகிறது இலங்கை.

Related posts: