ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹொக்கி: இறுதி போட்டிக்கு சென்றது இந்தியா!

Sunday, October 30th, 2016

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹொக்கி அரையிறுதி போட்டியில் தென் கொரிய அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹொக்கி அரையிறுதி போட்டி மலேசியாவின் குவாண்டன் நகரில் நடந்தன.

இந்த போட்டியில் தென் கொரியா மற்றும் இந்திய அணிகள் இன்று மோதின.  இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன.  இதனை தொடர்ந்து வெற்றி பெற பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.  இதனை அடுத்து இரு அணிகளும் வெற்றி பெறுவதற்காக கோல்கள் அடிக்கும் முயற்சியில் இறங்கின.

இறுதியில் இந்தியா 5-4 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  மற்றொரு அரையிறுதி போட்டியில் விளையாட உள்ள பாகிஸ்தான் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதி போட்டியில் விளையாடும்.

download-17 copy

Related posts: