அவுஸ்ரேலிய ஏ பிரிவு அணியின் சுற்றுபயணம் இரத்து!

Friday, July 7th, 2017

அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் அவுஸ்ரேலிய ஏ பிரிவு அணியின் தென்னாபிரிக்க சுற்றுபயணத்தை இரத்து செய்வதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய ஏ பிரிவு அணி இந்தியா மற்றும் தென்னாபிரிக்க ஏ பிரிவு அணிகளுடன் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி முத்தரப்பு தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவுஸ்ரேலிய ஏ அணி இத்தொடரில் பங்கேற்காததால் இந்த முத்தரப்பு தொடர் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

கிரிக்கெட் சபை வருவாயில் வீரர்களுக்கான பங்கு தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற அம்சத்தை அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளாமையினால் அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபைக்கும், அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுக்கொள்ளாததனால் ஜூலை 1ஆம் திகதி முதல் அனைத்து வீரர்களும் வேலையை இழந்ததாக கிரிக்கெட் சபை அறிவித்தது. எனினும் வீரர்கள் கிரிக்கெட் சபையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாமல் இனி வரவிருக்கும் அனைத்து சர்வதேச போட்டிகளையும் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Related posts: