அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் ஆரம்பம்!  

Wednesday, November 2nd, 2016

அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (03) பெர்த் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவை 5-0 என்று தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

2014 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய போது ரியான் ஹாரிஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி கேப்டவுனில் தொடரை வென்றனர்.இதனால், தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் முதலிடத்தைப் பறித்தது அவுஸ்திரேலியா.

ஆனால், இப்போது டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 3 ஆம் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 5 ஆம் இடத்திலும் உள்ளன.தென் ஆப்பிரிக்கா தனது கடைசி 12 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

தற்போது அந்த அணியின் தலைவரும் அபாரமான துடுப்பாட்ட வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.2012 இல் தென் ஆப்பிரிக்காவிடம் அவுஸ்திரேலியா உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு உள்நாட்டில் தொடரை இழக்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா பெர்த்தில் இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்று ஒன்றில் சமன் செய்துள்ளது.அவுஸ்திரேலிய அணி பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில்லை.

Australia-vs-South-Africa-1st-Test-Match-Prediction-Who-Will-Win

Related posts: