அணி பின்தங்கியிருந்த நிலையில் இருந்தும் எதிரணி வீரருக்கு உதவிய ஹீரோ ரொனால்டோ!

Sunday, July 1st, 2018

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தோல்வியடைந்த போதும் ரொனால்டோ ஹீரோவாக ஜொலித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல் அணி உருகுவே அணியிடம் தோல்விடையடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இப்போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் உருகுவே வீரர் கவானிக்கு காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் திணறினார். இதைப்பார்த்து பதறிய போர்ச்சுகல் அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ அவருக்கு உதவி பெவிலியன் திரும்ப உதவினார்.

தனது அணி பின்தங்கியிருந்த நிலையில் இருந்தும் எதிரணி வீரருக்கு உதவிய ஹீரோ ரொனால்டோவை இரு அணி ரசிகர்களும் பாராட்டும் விதமாக உற்சாகப்படுத்தினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts: