அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

Friday, June 29th, 2018

கடைசி லீக் போட்டியில் செர்பியாவை 2–0 என வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த சுற்றுக்கு பிரேசில் அணி முன்னேறியது.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘இ’ பிரிவு லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன நெய்மரின் பிரேசில் அணி செர்பியாவை சந்தித்தது. இதில் குறைந்தபட்சம் ‘டிரா’ செய்தால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் பிரேசில் களமிறங்கியது. போட்டியின் 25வது நிமிடம் ஜீசசிடம் இருந்து பந்தை வாங்கிய நெய்மர் கோல் அடிக்க முயன்றார். இதை செர்பிய கோல் கீப்பர் டோஜ்கோவிச் இடது கையால் தடுத்து அசத்தினார்.

35வது நிமிடம் கவுட்டினோ அடித்த பந்து செர்பிய கோல் போஸ்ட் முன் விழுந்து வேகமாக மேலே எழுந்தது. இதை தடுக்க ஓடி வந்தார் டோஜ்கோவிச். இதற்குள் முன் வந்த பவுலினோ பந்தை கோல் கீப்பர் தலைக்கு மேலாக துாக்கி விட கோலாக மாறியது. ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் நெய்மர் அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாக சென்றது. முதல் பாதியில் பிரேசில் அணி 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில் வில்லியன் தந்த பந்தை பெற்ற கவுட்டினோ தலையால் முட்டினார். இது நெய்மரிடம் சென்றது. இவர் அடித்த பந்தை  டோஜ்கோவிச் மீண்டும் தடுத்தார். 61வது நிமிடம் செர்பியாவின் ருகவினா அடித்த பந்து கோல் கீப்பர் அலிசன் பெக்கர் தடுக்க பந்து கையில் பட்டு திரும்பியது.  இதை மிட்ரோவிச் தலையால் முட்டினார்.  கோல் எல்லைக்கு அருகில் இருந்த தியாகோ சில்வா ‘தில்லாக’ தடுக்க பிரேசில் தலை தப்பியது.

68வது நிமிடம் கிடைத்த ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் நெய்மர் கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். அங்கிருந்த தியாகோ சில்வாஇ தலையால் முட்டி வலைக்குள் தள்ள பிரேசில் அணி (2–0) வெற்றி உறுதியானது. தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து விட முயன்ற நெய்மரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 7 புள்ளிகள் பெற்ற பிரேசில் அணி இப்பட்டியலில் முதலிடம் பிடித்து ‘அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. வரும் ஜூலை 2ம் திகதி மெக்சிகோவை சந்திக்கிறது.

கடந்த 1966 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் திரும்பியது பிரேசில். இதன் பின் எழுச்சி பெற்ற இந்த அணி 1970ல் கோப்பை வென்றது. அன்று முதல் தொடர்ந்து 13வது முறையாக ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

சுதந்திரத்துக்குப் களமிறங்கிய 2006  2010  2018 என மூன்று உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் திரும்பியது செர்பியா.கடந்த 2010க்குப் பின் லீக் சுற்றில் மோதிய அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றது பிரேசில் அணி.

Related posts: