அசத்தல் வெற்றிபெற்ற பெல்ஜியம் அணி!

Tuesday, June 19th, 2018

பனாமா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பனாமா அணி 3௲0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று சோச்சியில் நடந்த ‘ஜி’ பிரிவு போட்டியில் பெல்ஜியம், பனாமா அணிகள் மோதின. இத்தொடரின் கறுப்பு குதிரைகளில் ஒன்று என கூறப்படும் ‘ரெட் டெவில்ஸ்’ பெல்ஜியம் அணி, துவக்கத்தில் இருந்தே பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தது.

முதன் முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கும் பனாமா அணி கடும் சவால் கொடுத்தது. 40வது நிமிடம் லுாகாகு அடித்த பந்தை பனாமா கோல் கீப்பர் பெனெடோ அசத்தலாக தடுக்க முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.

கோல் மழை: இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடத்தில் (47 வது) நிமிடத்தில் டிரைஸ் மெர்டென்ஸ், அடித்த பந்து பெனெடோவை தாண்டி வலைக்குள் சென்றது. பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன் பின் போட்டி முழுவதும் பெல்ஜியம் வசம் வந்தது. 69 வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டி பிருயுன் அடித்த பந்து கோல் போஸ்ட் நோக்கிச் சென்றது. அருகில் இருந்த லுகாகு அப்படியே கிடைமட்டமாக பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்ற 2-0 என முந்தியது பெல்ஜியம்.

75 வது நிமிடம் மீண்டும் மிரட்டிய லுாகாகு, சக வீரர் ஹஜார்டிடம் இருந்து பெற்ற பந்தை கோலாக்கினார். கடைசியாக களமிறங்கிய 9 போட்டிகளில் இவர் அடித்த, 9வது கோல் இது. தவிர இத்தொடரில் முதன் முறையாக நேற்று தான் இரண்டாவது பாதியில் மட்டும் மூன்று கோல் அடிக்கப்பட்டன.

இதற்கு பதிலடி தர முயன்ற பனாமா அணியின் முயற்சிகள் ‘பனால்’ ஆக பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related posts: