விற்பனையில் ஐபோனை தாண்டுகிறது சாம்சங்! ஆப்பிளுக்கு அதிர்ச்சி!!

Sunday, July 17th, 2016

அமெரிக்காவில் ஐபோன் மோகம் குறைந்து வருகிறது. ஐபோன் பயன்படுத்தியவர்கள் இப்போது சாம்சங் உட்பட மற்ற பிராண்டுகள் பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஐபோன் தான் ஸ்மார்ட் போன்களில் முதலிடம் பிடிக்கிறது. அமெரிக்காவில் எந்த ஐபோன் மாடல்கள் வந்தாலும் உலகம் முழுக்க ஒருவித ஆர்வம் தொற்றிவிடும். சமீப காலமாக ஐபோன் மோகம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இளைய தலைமுறையினர் வேறு வேறு பிராண்டுகளுக்கு மாறுவதில் ஆர்வமாக உள்ளனர். ஐபோன் தான் கவுரவம் என்ற நிலை மாறி, சாம்சங் உட்பட சில பிராண்டுகளை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு விற்பனையில் அமெரிக்காவில் ஐபோன் சற்று லேசாக சரிந்துள்ளது.

ஐபோன் 6எஸ் போன் விற்பனை 14.6 சதவீதமாக இருந்தது. அதே சமயம், சாம்சங் ஸ்மார்ட் போன் கேலக்சி 7 விற்பனை 16 சதவீதத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு உலகம் முழுக்க 23 கோடியே 10 லட்சமாக இருந்தது. இந்தாண்டு இறுதி கணக்குபடி ஐபோன் விற்பனை எண்ணிக்கை 20 கோடியே 37 லட்சமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

இதுபோல, உலகம் முழுக்க ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு பெரும் மவுசு இருந்தது. கடந்தாண்டு கம்ப்யூட்டர்கள் விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் விற்பனை கடந்தாண்டு ஒப்பிட்டால் 7.4 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: